தென்னிந்திய சினிமாவின் தற்போதைய ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் அர்ஜுன் தாஸ் 2012ல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். இதனிடையே அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அர்ஜுன் தாஸ் பரவலாக அறியப்பட்டார்.

இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் அதைவிட கர்ஜிக்கும் சிங்கம் போன்ற அவரது குரல் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடைந்தது. அதன் பிறகு விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது, அர்ஜுன் தாஸ் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகும் நிலையில், அந்த பெண் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.