அர்ஜுன் வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவை கேட்டா தல சுத்துது..!

Author: Vignesh
11 June 2024, 8:49 pm
aishwarya-arjun-
Quick Share

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அப்படி இவர் நடித்து தமிழில் வெளியான இரும்புத்திரை, கொலைகாரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்தார். நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார்.

மேலும் படிக்க: அரிய வகை நோய்.. வீட்ல பகத் பாசில் பண்றதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு.. நஸ்ரியா ஷாக்கிங் தகவல்..!

ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதலில் இருந்துவருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவி வைரலாகியது. மேலும் அர்ஜுனும் தம்பி ராமையாவும் இணைந்து இருவரது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று சொல்லப்பட்டது.

aishwarya arjun

இவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது என நீங்கள் கேட்கலாம், நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி ராமைய்யா போட்டியாளராக இருந்துள்ளார். அப்போது அந்த செட்டிற்கு அடிக்கடி ஐஸ்வர்யா வந்துபோவதுண்டாம். அங்கு தான் இருவரும் நட்பு ஆரம்பித்து பின்னர் காதலாக மாறியுள்ளது.

aishwarya arjun

இது அர்ஜுனுக்கு தெரியவர ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தாலும் பின்னர் சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி மிகவும் நல்ல குணம் உடையவராக இருந்துள்ளார். அதை நம்பி தன் மகளை கட்டிக்கொடுக்க அர்ஜுன் ஓகே சொல்லிவிட்டார். உமாபதி யாஷிகாவுடன் சேர்ந்து மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததால் அவருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

மேலும் படிக்க: கங்கனாவுக்கு பளார்னு அறைவிட்டு கன்னத்தை பழுக்க வைத்த போலீஸ்.. கை ரேகை பதிவாகிருக்கு.. பரவும் போட்டோ..!

இதனிடையே, ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மாண்டமாக நடந்தது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டு தீயாய் பரவியது.

aishwarya arjun

இந்நிலையில், சென்னையில் அர்ஜுன் காட்டியிருக்கும் அனுமன் கோவிலில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஜூன் 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும், அதில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றும், இதற்கு முன்பாக ஐஸ்வர்யா தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பேச்சுலர் பார்ட்டி கொண்டாடி இருந்தார். படங்கள் அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

aishwarya arjun

மேலும் படிக்க: புதிய தொழிலில் கல்லா கட்டும் பிரியங்கா நல்காரி.. ஆரம்பத்திலே ஓஹோன்னு கொட்டும் வருமானம்..!

இந்நிலையில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சில கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அர்ஜுன் வீட்டில் முதல் கல்யாணம் என்பதால் மூன்று நாட்களுக்கு கொண்டாட்டத்திற்கு சிறப்பாக செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இரு நடிகர்களின் குடும்பம் பெரியது என்பதால் 10 லிருந்து 20 கோடி செலவு செய்வார்கள். அப்படி சமீபத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறார் அர்ஜுன். அந்த இடத்தில், பிரம்மாண்டமாக செட்டு போட்டு திருமண நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

aishwarya-arjun-

மேலும், மூன்று நாட்களும் அந்த பகுதியில் இருக்கும் ஏழைகளுக்கு அர்ஜுன் சாப்பாடு போடுவார் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்திருந்தார். மேலும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு வந்தவர்களின் ஒருவரது உணவுக்கு மட்டும் ரூ 6000 செலவிடப்பட்டதாம். எப்படியும் உணவுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும் என்கிறார்கள்.

Views: - 90

0

0

Leave a Reply