நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்த அர்ஜுன்.. பிரபல இயக்குனரால் மனம் மாறிய சம்பவம்..!
Author: Vignesh17 August 2023, 12:00 pm
80, தொண்ணூறு காலங்கட்டங்களில் திரை உலகில் முன்னணி நாயகனாகவும் ஆக்சன் கிங் ஆகவும் திகழ்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன். ஜாக்கி ஜான் போல இவர் ஆக்ஷனில் கலக்கி வருபவர். இவர் நடிப்போடு நின்று விடாமல் இவர் டைரக்ஷன், தயாரிப்பு போன்ற பன்முகத்திறமையைக் கொண்டவர்.
தமிழில் டாப் ஹீரோவாக இருந்தவர் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
60 வயதிலும் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு உடலை மெருகேற்றி கட்டுக்கோப்பாக வைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். முன்னதாக ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால், தன் சொந்த பணத்தை வைத்து தானே இயக்கலாம் என முடிவு செய்தார்.
சேவகன் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடிக்க தொடங்கினார். மேலும், அந்த காலகட்டங்களில் வேற எந்த இயக்குனரின் இயக்கத்திலும் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தார்.
ஆனால், சங்கர் வந்து ஜென்டில்மேன் கதையை சொன்னவுடன் இப்படத்தை மிஸ் செய்து விடக்கூடாது என தனது முடிவை மாற்றி உடனே படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.
அப்படம் அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் அர்ஜுன் லியோ படத்தில் ஹரால்டு தாஸ் என்ற ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.