சில்க் ஸ்மிதா சொன்ன அந்த ஒரு வார்த்தை… மரண சேதி கேட்டு ஓடோடி வந்த அர்ஜுன்!

Author: Shree
26 July 2023, 7:15 am

இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

silk smitha - updatenews360.jpg 2

அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

arjun - updatenews360

பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். ஈர்த்து மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிலிம் ஸ்மிதா குறித்து பிரபல பத்திரிகையாளர் மூத்த பத்திரிக்கையாளர் தோட்டா பாவாநாராயணன் சில்க் ஸ்மிதா குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார், அதாவது சில்க் ஸ்மிதா மரணத்தை அறிந்ததும் நேரில் ஓடிவந்து அஞ்சலி செலுத்திய ஒரே நடிகர் அர்ஜுன் தான் என அவர் கூறியுள்ளார். சில்க் மரணிப்பதற்கு முன்னர் அர்ஜுனிடம் ” நான் இறந்து போனால் என் சாவுக்கு நீ வருவாயா என்று கேட்டாராம். ஆனால், இதை விளையாட்டாக நினைத்த அர்ஜுன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். பின்னர் மரண செய்தி கேட்டதும் அதிர்ச்சியடைந்து ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தினாராம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!