தனுஷுக்கு எதிராக அஜித் பட வில்லன்? விரைவில் எதிர்பாரா ட்விஸ்ட்!
Author: Hariharasudhan18 February 2025, 4:56 pm
தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் பன்முகக் கலைஞனான நடிகர் தனுஷ் குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். அதோடு, பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியது. பின்னர், மும்பையில் உள்ள ஒரு கல்லூரியிலும் நடைபெற்றது. இந்த நிலையில், பாலிவுட் படத்தை தொடர்ந்து, போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதற்கான கலைஞர்கள் தேர்வும் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் இந்தப் படத்தில், தனுஷுக்கு வில்லனாக நடிப்பதற்கு நடிகர் அர்ஜுனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், தனுஷ் தற்போது அவருடைய பாலிவுட் சினிமாவான அமராவதி மற்றும் கலாட்டா கல்யாணம் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் உடன் இணைந்து அடுத்த பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் சம்பவம் செய்த அருண் விஜய் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எந்த ஊரு ஆட்டக்காரி? அடேங்கப்பா.. ஆர்யாவோட மனைவியா இது?
இந்த நிலையில், அடுத்த படத்திலும், மங்காத்தா, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அர்ஜுன் தனுஷ் படத்தில் இணைய உள்ளது ஒரு எதிர்பாரா எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மேலும், அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.