பிரபல தமிழ் வாரிசு நடிகரை காதலிக்கும் அர்ஜூன் மகள்… தை மாதம் டும்டும்டும்… வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2023, 7:18 pm

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்துவந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அப்படி இவர் நடித்து தமிழில் வெளியான இரும்புத்திரை, கொலைகாரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துவரும் லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதலில் இருந்துவருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.

மேலும் அர்ஜுனும் தம்பி ராமையாவும் இணைந்து இருவரது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!