சர்ச்சை நடிகரோடு சாட்டிங் செய்யும் திவ்யா.. நீ அவ்வளவு யோக்கியம் கிடையாது.. ஆதாரத்தை வெளியிட்ட அர்ணவ்..!
Author: Vignesh6 ஜூன் 2023, 3:35 மணி
சின்னத்திரை நடிகரான அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா காதல் திருமணம் செய்துக் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதில் நடிகர் அர்ணவ் மீது திவ்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். குறிப்பாக இலங்கை பெண்ணை ஏமாற்றியதாகவும், திருநங்கையுடன் தொடர்பு இருந்ததாகவும் அர்ணவ் மீது அடுக்காடுக்கான குற்றச்சாட்டை திவ்யா முன்வைத்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவ்யா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆடியோ வடிவில் அர்ணவ் வெளியிட்டு உள்ளார். அதில் திவ்யா தற்போது வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் அர்ணவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, பிரபல தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அர்ணவ், இந்த பிரச்சனை போலீசுக்கு வந்து தான் கைதாகி பிறகு ஜாமினில் வந்து இப்போ மீண்டும் நடித்துக்கொண்டு இருப்பதாகவும், தன்னுடைய பெயரில் வாங்கப்பட்ட அந்த வீட்டில் கூட இப்ப திவ்யா தான் இருப்பதாகவும், அந்த வீட்டுக்கு கூட தான் செல்வது இல்லை, என்றும், ஆனால் சில youtube சேனல்களில் சாதாரணமாக தன்கிட்ட பேட்டின்னு கூப்பிட்டாங்க, தானும் போனேன் அப்போ திவ்யா பற்றி சில கேள்விகளை கேட்டாங்க. அதற்கு சில பதில்களையும் சொன்னேன் இவ்வளவு தன் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு திவ்யாவுக்கு எந்த தொந்தரவும் தரவில்லை என்றும், ஆனா இந்த மாதிரி சூழ்நிலையில மறுபடியும் இந்தப் பிரச்சனை மீடியாவுக்கு வருதுன்னா இது திட்டமிட்டு பண்ணியிருக்காங்க என்றும், நடிகர் ஈஸ்வர் தான் தங்கள் ரெண்டு பேருக்கும் இடையே கேம் ஆடுவதாகவும், தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்றும், அது இப்போ உண்மை என்கிற மாதிரி திவ்யாவும் ஈஸ்வரும் பேசிய சில ஸ்க்ரீன் ஷாட்டுகள் தனக்கு கிடைச்சிருக்கு அத பாத்தா உண்மை தெரிஞ்சிடும்.
முன்னதாக தான் ஜெயிலுக்கு சென்று வந்த பிறகு சேனலில் தன்னை தொடர்ந்து நடிக்க வச்சுட்டு இருக்காங்களே, அவன் கேரியரை காலி செய்யணும் அதுக்கு ஏதாவது ஐடியா கொடு என்று திவ்யா ஈஸ்வர் கிட்ட கேட்டு இருப்பதாகவும், அதற்கு ஈஸ்வர் அவனுடைய கடந்த காலத்தை பற்றி உனக்கு தெரிஞ்சதெல்லாம் மீடியா கிட்ட சொல்லு, மத்தத அவங்க பாத்துக்குவாங்கன்னு ஈஸ்வர் பதில் சொல்றதுமான அந்த சேட்டிங்ல இருக்கிறது என்றும், திட்டமிட்டு தான் அவங்க இந்த மாதிரி செய்து இருக்காங்க தானுமே திவ்யாவின் கடந்த காலத்தை பத்தி பேச தன்கிட்ட நிறைய வீடியோ, ஆடியோ ஆதாரம் இருக்கு என்றும், அதை எல்லாம் வெளியிட தனக்கு தெரியாதா? தன்னோட சேனல் தரப்பில் இருந்து நீங்க சட்டப்படி என்ன செய்யனுமோ அதை செய்யுங்க என்று தெரிவித்துள்ளதாக அர்னவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், திரும்ப திரும்ப இந்த பிரச்சனைய மீடியா முன்னாடி கொண்டு செல்லாதிங்க அது சீரியலையும் பாதிக்கும்னு சொல்லி இருப்பதால், அதனால தான் தான் பேசாமல் இருக்கேன் என்று அர்ணவ் தெரிவித்து இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஈஸ்வர் பிரபல செய்தி சேனலில் பேசுகையில் தனக்கு தன் பிரச்சனையே தீர்க்க முடியாத தான் இருப்பதாகவும், இவங்க ரெண்டு பேருக்கும் உதவி செய்யப் போய் அது தனக்கே எதிராக மாறி, இந்த மாதிரியான பிரச்சனைகளை கிளப்பி விடுவதாகவும், இது பற்றி எதுவும் தான் இனி பேச விரும்பவில்லை என்றும், ஒருத்தர் நம்மள பார்த்து குறைச்சுக்கிட்டே நினைக்கிறேன் இருந்தா நாம கண்டுக்காம விட்றது தான் நல்லதுனு என ஈஸ்வர் பதில் கொடுத்து உள்ளார்.
1
0