“ரசிகர்கள் செய்த செயலால் கோபமடைந்த அஜித்”… என்ன செஞ்சாங்க தெரியுமா..? உண்மையை உடைத்த பிரபலம்..!
Author: Vignesh15 December 2022, 10:16 am
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் நடிகர் அஜித்குமார் துணிவு படத்தில் நடித்துள்ளார். துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 2013-ல் வெளியான படம் ஆரம்பம் அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவானது. இப்படத்தில் கதை எழுத்தாளர்களாக பணியாற்றிய சுபா என்று அழைக்கப்படும் சுரேஷ் மற்றும் பால கிருஷ்ணன் அவர்கள் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டனர். மும்பையில் ஷூட்டிங் ஆரம்பம் படத்தின் போது நடைபெற்றது. அப்போது நயன் தாரா, ஆர்யா ஷூட் நடக்கும் போது அஜித் வந்து சும்மா உட்கார்ந்து பார்த்து வந்தார்.
அதன்பின் பெங்களூருவில் ஷூட்டிங் நடந்த போது, நாங்கள் அஜித், விஷ்ணுவர்தன் ஒரு ஓட்டலில் தங்கிருந்தோம். அங்கு அஜித்தை பார்க்க அவர்களது ரசிகர்கள் ஓட்டலின் பிளாட்பாரத்தில் காத்திருந்துள்ளனர்.
அப்படி ஒரு முறை, படத்திற்காக பெரிய ஆடம்பர வீட்டில் படப்பிடிப்பு நடக்கும். ஒரு ரசிகர் மதில்சுவர் மீது ஏறிய போது ஒரு காரின் மீது மோதி முன்பக்கத்தினை உடைத்துவிட்டான் ஒரு ரசிகர். இதையறிந்து என்ன இவங்க இப்படி பண்றாங்க எதாவது ஆகிவிட்டதே என்று கூறியதுடன் காருக்கான செலவினை கொடுத்தார். பின் ஷூட்டிங்கில் போலிஸ் பாதுகாப்பு வைத்தார்கள்.
அதேபோல் இன்னொருமுறை அஜித் சார் காரில் சென்றிந்த போது ஒரு ரசிகர் அவரின் காரில் பால்-ஐ ஊற்றி அபிஷேகம் செய்தார். இதனால் கடுமையான கோபத்தில் இறங்கி வெளியில் வந்து என்னப்பா இது என்று கண்டபடி திட்டினார்.
பின் ரசிகர்கள் தண்ணீர் ஊற்றி கழுவிட்டு சாரி தல என்று கூறிவிட்டு போனார்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அஜித் காரை பாலோ செய்த ஒரு நபர் எதற்ச்சியாக பைக்கில் இருந்து விழுந்து விட்டான்.
இதனால் அப்செட்டாகிய அஜித், யாருக்காவது எதாது ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று ஷூட்டிங்கை இங்க வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு விமானநிலையத்துக்கு சென்றுவிட்டார் . பின் திரும்பி வந்த அஜித் என்னால் இங்கு ஷூட்டிங் செய்ய முடியாது என்று கூறியதால் அங்கிருந்து ஸ்பாட்டை காலிசெய்தோம் என்று கூறியுள்ளனர்.