நடிகர் விஜய்யை கைது செய்யுங்கள்… காசுக்கொடுத்து ஆபாசமாக திட்டுகிறார் – பெண் பகிரங்க புகார்!

Author: Shree
6 July 2023, 7:33 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதற்கிடையே, ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இந்த பாடல் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் விஜய் சிக்ரெட் பிடிக்கும் கட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து பல சமூக ஆர்வலர்கள் கண்டம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய்யை எதிர்த்து, ராஜேஸ்வரி பிரியா என்பவர் “நா ரெடி” பாடலில் புகைப்பிடித்தல் குறித்த டிஸ்க்ளைமர் வார்த்தைகளை போடவில்லை என்று விஜய்யை கைது செய்யக்கோரி டிஜிபி-யை பார்த்து மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு விஜய் முகம் கொண்ட போலி அக்கவுண்டில் இருந்து ஆபாச வசனங்கள், வார்த்தைகளால், வீடியோக்கள் வெளியிட்டு கொச்சையான வார்த்தைகளை கூறி திட்ட வருவதாக இதனை விஜய் தான் தன் ரசிகர்களுக்கு காசு கொடுத்து செய்வதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். எனவே விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று அவர் கண்டித்துள்ளார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!