அந்த மாதிரி அத்துமீறிய தந்தை.. கடைக்குட்டி சிங்கம் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு.. வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh6 July 2023, 12:30 pm
கார்த்திக் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அர்த்தனா பினு. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே, அர்த்தனா பினு தன்னுடைய சொந்த தந்தை மீது பகிர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதில் அவர் காலை 9:45 மணி அளவில் காவல் நிலையத்திற்கு உதவி கேட்டும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பே தனது அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்து கொண்டதாகவும், அம்மாவும், தானும், சகோதரியும் 85 வயதில் தன்னுடைய தாய் வழி பாட்டியுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் மீது போலீசில் பல வழக்குகள் இருப்பதாகவும், தான் படங்களின் நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்றும், அவரது பேச்சை கேட்காவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும், மிரட்டல் விடுத்து வருவதாகவும், தான் நடிக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று கூறி வருவதாகவும், எப்போதும் வீட்டிற்கு வந்து கத்தி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பாட்டி தன்னை வாழ்வதற்காக விற்று விட்டதாகவும் கூறி வருவதாக அர்த்தனா பினு தெரிவித்துள்ளார்.
இதனிடையே தன்னுடைய தந்தை அடிக்கடி வீட்டிற்கு வந்து அத்துமீறி தன்னையும் தன்னுடைய சகோதரிக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக இணையதளத்தில் வீடியோ ஒன்றையும், வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.