ஆரத்தி செய்த ‘அந்த’ செயல்.. ஜெயம் ரவியின் விவாகரத்துக்கான காரணத்தை வெளியிட்ட பிரபலம்..!

Author: Vignesh
10 July 2024, 9:39 am

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்தை அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து லிஸ்ட் பெருசாகிக் கொண்டே உள்ளது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ள ஜெயம் ரவி ஆரத்தி தம்பதியினரை குறித்து சில பத்திரிகைகளில் ஜெயம் ரவி ஆரத்திக்கு இடையே, கருத்து மோதல் ஏற்பட்டது விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

jayam ravi

சிலர் இதுபோன்ற செய்திகள் உண்மை இல்லை என்றும், இது வெறும் வதந்தியே என்றும் சொல்லி வந்தனர். மேலும், ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இவர்களது விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்றினை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஜெயம் ரவி அவருடைய மாமியாரிடம் சம்பளம் கேட்டது தான் பெரிய பிரச்சனை என்று கூறப்பட்டது. ஆனால், அது எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. ஆரத்திக்கு ஜெயம் ரவி மீது சந்தேகம் அதிகமாக வரும் படப்பிடிப்பில் அடிக்கடி போன் செய்வார் போன் எடுக்கவில்லை என்றால், உடன் பணிபுரியும் அனைவருக்கும் போன் போட்டு விசாரித்து விடுவார்.

jayam ravi mamiyar

ஒரு கட்டத்தில் யாருமே போன் எடுக்கவில்லை என்றால், நேரடியாக படபிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார் என்று கூறியுள்ளார். ரவியை தொடர்ந்து கண்காணிப்பது போன்று ஆரத்தி நடந்து கொண்டதுதான் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமானதற்கு காரணம். ஒரு கட்டத்தில், இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் இருவருக்கும் பிரச்சனை தொடங்கியுள்ளதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 145

    0

    0