தல அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி”திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அஜித்தின் 62வது ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டோ நடித்திருக்கிறார்கள் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கெசெண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி படத்தை பார்த்த அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியை அழைத்து படம் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கிறது. நீங்க என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க மகிழ் என கூறி அவரை பாராட்டினாராம்.
அஜித்தின் இந்த முதல் விமர்சனம் அவரது ரசிகர்களை படம் பார்க்க மேலும் தூண்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஹர்பஜனில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கியது.
இதன்பின் வட மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட வந்தது. அடுத்து வருகிற தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாகும் என படக் குழுத் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. குறிப்பிடத்தக்கது.