அவருக்கு பதில் இவர்… இளையராஜாவின் Biopic இயக்கப்போவது யார் தெரியுமா?

Author: Rajesh
27 February 2024, 9:35 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கடைசியாக உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க உள்ளார். இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க ரஜினி , கமலே பயந்து வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்களாம். ஆனால், தனுஷ் தற்போது துணிந்து இறங்கி நடிக்க உள்ளதை கோலிவுட்டே வியந்து பார்த்து அவரை பாராட்டி வருகிறதாம். இப்படம் நிச்சயம் தனுஷிற்கு தேசிய விருது வாங்கி கொடுக்கும் என பலர் நம்பிக்கை கூறி வருகின்றனர்.

இப்படத்தை இளையராஜாவின் தீவிர ரசிகரான இயக்குனர் பால்கி இயக்குகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்த தகவலின் படி, பால்கிக்கு பதிலாக இளையராஜாவின் பயோபிக்கை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக்ஷன் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வந்த அருண் மாதேஸ்வரன் தற்போது பயோ பிக்கை கையில் எடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது. அருண் மாதேஸ்வரன் முன்னதாக கேப்டன் மில்லர், சாணிக்காயிதம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?
  • Close menu