சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.
அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதன்பின்னர், விஜய் பற்றிய விஷயங்கள் தான் இணையதளத்திலும் தொலைக்காட்சி சேனலிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய் பற்றி பிரபலங்கள் பேசியது முதல் விஜயின் புகைப்படங்கள் மற்றும் பழைய பேட்டிகள் வரை இணையதளத்தில் வீடியோக்களாக வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
அந்த வகையில், நடிகர் அருண் பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜியுடன் நான் சண்டை போட்டு இருக்கிறேன். நிறைய பிரச்சனை இருக்கு, ஆனால் இந்த விஷயத்தில் அவர் செய்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாக, சினிமாவில் தன்னுடைய காலம் முடிந்த பின் தான் அரசியலில் இயங்குவார்கள். ஆனால், விஜய் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே துணிந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். அதற்கு, என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். விஜய் குறித்து நடிகர் அருண்பாண்டியன் பேசியது தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.