த்ரிஷா கூட அதை பண்ணியே ஆகணும் அடம் பிடித்த அரசியல்வாதி.. ஷூட்டிங்கில் நடந்ததை புட்டு புட்டு வைத்த இயக்குனர்..!

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

த்ரிஷா நடித்த ஒருசில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவருக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே, பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா. மேலும், நடிகை திரிஷா இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி வளர்ந்து வரும் வேகத்தில் அதற்கு ஈடாக பல்வேறு பிரச்சனைகளையும் திரிஷா சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கொடுத்த பேட்டி பெரும் சர்ச்சையானது. அதில், அவர் கூறியதாவது, “கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம். அவர் திரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததார்.

அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும். எடப்பாடி சொல்லி தான் திரிஷாவை கருணாஸ் ஏற்பாடு செய்தார்” என ஏ.வி. ராஜு தெரிவித்தார். எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் ஏ.வி. ராஜுவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் சேரன், பாடகி சின்மயி, நடிகை காயத்ரி ரகுராம், விஷால் ஆகியோர் ஏ.வி. ராஜுவுக்குகடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ட்விட் செய்த நடிகை திரிஷா நிச்சயம் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்” என திரிஷா காட்டமாக கூறி இருந்தார்.

இந்நிலையில், தி ரோடு படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் திரிஷா விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் நாங்கள் மதுரைக்கு ஷூட்டிங் காக சென்று இருந்தோம். அந்த சமயத்தில், கவுன்சிலர் ஒருவர் த்ரிஷாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நேரம் காத்திருந்தார். அதற்கு திரிஷா கண்டுகொள்ளாமல் இருந்தார். உடனே நான் மேடம் அவர் வெயிட் செய்கிறார் என்று கூறினேன்.

அதற்கு த்ரிஷா அரசியல்வாதியோடு போட்டோ எடுத்தால், அவர்கள் மிஸ் யூஸ் செய்து விடுவார்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இப்படிப்பட்டவரா அந்த அதிமுக முன்னாள் நிர்வாகி சொன்னது போல் நடந்திருப்பார். அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் அருண் வசீகரன் பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

12 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

13 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

13 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

14 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

14 hours ago

This website uses cookies.