பெத்த தாய் பற்றி இப்படி பேசலாமா.. குடும்பத்தை இழுத்த யூடியப் சேனல் : கொந்தளித்த நடிகர் அருண் விஜய்!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2024, 8:48 pm

பெத்த தாய் பற்றி இப்படி பேசலாமா.. குடும்பத்தை இழுத்த யூடியப் சேனல் : கொந்தளித்த நடிகர் அருண் விஜய்!

தனது குடும்பத்தை பற்றி அவதூறு தகவல்களை பதிவிட்ட யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளது.

இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 253

    0

    0