தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது கெரியரை துவங்கினார். அவர் தொடர்ந்து காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி போன்று சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.
தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்ததால் அவர் மார்க்கெட் இழந்து ராசியில்லாத நடிகராக சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். வாரிசு குடும்பத்தில் பிறந்தும், நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதை தேர்வு சரியாக செய்ததால் அருண் விஜய் கெரியரையே இழந்துவிட்டார்.
அதன் பின்னர் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்படத்தில் அஜித்தை காட்டிலும் அருண் விஜய் கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் வாய்ப்புகள் மளமளவென குவிந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான மிஷன் சாப்டர் ஒன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில், அருண் விஜய் கலந்து கொண்ட போது தன் மனைவி ஆரத்தி உடன் நேர்காணலில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் நடிகைகளுடன் இதெல்லாம் பண்ணக்கூடாது என்று தடம் படத்தின் போது சொன்னேன் என்று அருண் விஜய்யின் மனைவி தெரிவித்தார். அப்படத்தில், நெருக்கமான காட்சியை மனைவி இல்லாத போது எடுத்து முடித்து விட்டேன். ட்ரைலரை பார்த்துவிட்டு ஏன் என்கிட்ட அந்த சீன் இருப்பதை சொல்லலை என்று ஆரத்தி கேட்டு தன்னை கேட்டு கொஞ்சம் சம்பவம் ஆச்சு.. அடி வாங்கியதாகவும் அருண் விஜய் தெரிவித்து இருந்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.