அக்கா பொண்ணு கல்யாணத்தில் மனைவியுடன் Romantic நடனமாடி தூள் கிளப்பிய அருண் விஜய்!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது கெரியரை துவங்கினார். அவர் தொடர்ந்து காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி போன்று சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.

தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்ததால் அவர் மார்க்கெட் இழந்து ராசியில்லாத நடிகராக சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். வாரிசு குடும்பத்தில் பிறந்தும், நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதை தேர்வு சரியாக செய்ததால் அருண் விஜய் கெரியரையே இழந்துவிட்டார்.

அதன் பின்னர் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்படத்தில் அஜித்தை காட்டிலும் அருண் விஜய் கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் வாய்ப்புகள் மளமளவென குவிந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் மற்றும் அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக அருண் விஜய் வீட்டு திருமண வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று மெஹந்தி விழா நடைபெற்ற நிலையில் அதில் ஸ்ரீதேவி, விஜயகுமார், அனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடனமாடிய வீடியோக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அந்தவகையில் தற்போது அருண்விஜய் தனது மனைவி ஆர்த்தி உடன் ரொமான்டிக் நடனமாடி அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தார். அவர்களின் ரொமான்ஸ் திரைப்பட பாடல் காட்சியையே மிஞ்சிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/shorts/-mKqkFmg7tE
UpdateNews360 Rajesh

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

5 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

5 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

6 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

7 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

8 hours ago

This website uses cookies.