பல எலும்பு முறிவுகள்.. தசை நார் கிழிவு.. வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த அருண் விஜய்..!

Author: Vignesh
23 January 2024, 8:51 am

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது கெரியரை துவங்கினார். அவர் தொடர்ந்து காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி போன்று சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.

தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்ததால் அவர் மார்க்கெட் இழந்து ராசியில்லாத நடிகராக சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். வாரிசு குடும்பத்தில் பிறந்தும், நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதை தேர்வு சரியாக செய்ததால் அருண் விஜய் கெரியரையே இழந்துவிட்டார்.

arun vijay

அதன் பின்னர் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்படத்தில் அஜித்தை காட்டிலும் அருண் விஜய் கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் வாய்ப்புகள் மளமளவென குவிந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஏ எல் விஜய் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்க மிஷின் Chapter 1 கடந்த ஜனவரி 12 அன்று பொங்கல் ஸ்பெஷல் ஆக வெளியானது. ஆக்சன் தில்லர் திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படத்தில் எமி ஜாக்சன், நிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், அருண் விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், எக்கச்சக்கமான சண்டைக் காட்சிகள் ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்று இருக்கிறது. சண்டை காட்சிகளில் எடுக்கப்பட்ட போது காயங்களின் போட்டோக்களையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதனையும் பகிர்ந்து மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவுக்கு முன்னால் இந்த காயங்களின் வலி எதுவும் பெரியதாக தெரியவில்லை என்று உருக்கமாக பகிர்ந்து உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 273

    0

    0