அருண் விஜய்யின் யானை படத்தின் மிரட்டலான புதிய Glimpse வீடியோ வைரல்.!

Author: Rajesh
29 June 2022, 4:13 pm

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இவர் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் யானை படத்தில் நடிக்கிறார்.Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்டஇந்த படம் உருவாகிறது.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ்,கே ஜி எப் புகழ் கருடா ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் புதிய Glimpse வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 825

    0

    0