அருண் விஜய் – எமி ஜாக்சனின் மிரட்டலான நடிப்பில் “மிஷன்” டீசர் ரிலீஸ்!

Author: Shree
5 April 2023, 5:49 pm

தமிழ் சினிமாவில் கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, வனமகன், தலைவி ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ. எல் விஜய். இவர் தற்போது அருண் விஜய்யை வைத்து ‘மிஷன்’ சாப்டர் 1 – ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. இப்படம் பெரும்பாலும் லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகளோடு படமாக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இப்படம் அருண்விஜய் மார்க்கெட் உயர உதவும். இதோ அந்த டீசர் வீடியோ!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 644

    7

    0