‘வணங்கான்‘ படத்தில் சூர்யாவுக்கு பதில் அதர்வா இல்லையாம்… முதன்முறையாக பாலா இயக்கத்தில் இணைந்த வாரிசு நடிகர்..!

Author: Vignesh
21 December 2022, 1:00 pm

தமிழ் சினிமாவில் இன்று நடிப்பின் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் சூர்யா. அவர் இந்த அளவுக்கு தலைசிறந்த நடிகராக உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் என்றால் அது பாலா தான்.

இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரு படங்கள் தான் சூர்யாவை ஒரு தரமான நடிகராக்கியது. சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இந்த இரண்டு படங்கள் தான்.

இதனால் சூர்யா – பாலா இடையே நெருங்கிய நட்பும் உருவானது. இதன் காரணமாக தான் பாலா இயக்கத்தில் ஆர்யா – விஷால் நடித்த அவன் இவன் படத்தில் கூட நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

நந்தா, பிதாமகன் படத்துக்கு பின்னர் சூர்யாவும், பாலாவும் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

அவர்கள் இருவரும் வணங்கான் என்கிற படத்தின் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. அங்கு வணங்கான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஒருமாதம் நடத்தினர்.

அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அதன்பின் நடக்கவே இல்லை. படத்தின் கதையில் சில மாற்றங்களை பாலா செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

ஆனால் அந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால் அவரை இப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், அதனால் சூர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாலா.

இருப்பினும் வணங்கான் படத்தின் பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அவருக்கு பதில் நடிகர் முரளியின் மகன் அதர்வாவை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், அது வெறும் வதந்தி என தெரியவந்தது. இந்நிலையில், தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அருண் விஜய்யை நடிக்க வைக்க இயக்குனர் பாலா முடிவு செய்துள்ளாராம்.

arun vijay - updatenews360

இதைப் பார்க்கும் போது சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை தான் பாலா தேர்வு செய்துள்ளார் என தோன்றுகிறது. இதன்மூலம் முதன்முறையாக பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். இப்படத்தில் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் பாலா. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளாராம் பாலா. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!