அரவிந்த்சாமியின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு எவர் கிரீன் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னதாக பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன்முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தளபதி படத்தில் பெரிய ஸ்டாராக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தார்.
இதனிடையே, ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படத்தின் மூலமாக அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். இவர் 1991ம் ஆண்டு தளபதி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரோஜா, மின்சார கனவு, அலைபாயுதே, என் சுவாசக் காற்றே, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ருத்ரா,ஆதிரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
முன்னதாக, பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு நடிகர் அரவிந்த்சாமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். நிறைய சீரியல்களில் நடித்த நடிகரான டெல்லி குமார் தான் அரவிந்த்சாமியின் தந்தை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அரவிந்த்சாமியின் தந்தை வி.டி.சுவாமி தான் இவர் பெரிய தொழிலதிபர் என்றும், இவருடைய மனைவி ஒரு பரதநாட்டிய கலைஞர் என்றும், இவருடைய வளர்ப்பு மகன்தான் அரவிந்தசாமி என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், செய்யாறு பாலு இது குறித்து அரவிந்த்சாமி யாரிடமும் சொன்னதும் கிடையாது அரவிந்த்சாமி பிறந்ததும் டெல்லி குமார் அவருடைய உறவினரான வி.டி.சுவாமியிடம் தத்து கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக அரவிந்த்சாமி தனது சொந்த வாழ்க்கை குறித்து யாரிடமும் வெளிப்படையாக பேசியதில்லை என்று பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, சீரியல் நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அரவிந்த்சாமி குறித்த ரகசியத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதாவது, அரவிந்த்சாமி தன்னுடைய மகன்தான் என்றும், அவர் பிறந்த உடனே அவரை தன் மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்துவிட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், அரவிந்த்சாமி என் மகன் தான் அவரைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் உண்மை தான். அதில், மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றும், குடும்பத்தில் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டும் அரவிந்த்சாமி கலந்து கொள்வார் என டெல்லி குமார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அரவிந்த்சாமி தன்னுடைய சகோதர, சகோதரியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த்சாமி தன்னுடைய கல்லூரி பருவத்தில் தான் சகோதரி மற்றும் சகோதரரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.