இளையராஜாவிற்கு ஸ்டுடியோ’ல என்ன மரியாதை தரணுமோ தருவேன்.. ஆனா இது.. அரவிந்த்சாமி பளீர்

Author: Rajesh
2 July 2023, 5:00 pm

90ஸ் களில் தமிழ் சினிமாவில் பெண்கள் மத்தியில் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. 1991ம் ஆண்டு வெளிவந்த தளபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அறிமுகமான படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இயக்குனர் மணிரத்தினத்திடமும் நல்ல அபிமானத்தை பெற்றதால், அடுத்ததாக இவரை கதாநாயகனாக வைத்து மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் ரோஜா. ரோஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை பெற்றது. மேலும் இப்படம் ஏ.ஆர் ரகுமானுக்கு முதல் படமாக அமைந்து அவரையும் பிரபலப்படுத்தியது.

தளபதி படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா தங்கள் படத்திற்கு இசையமைக்க இயக்குனர்கள் காத்திருந்த சமயம் அது. பொதுவாக படப்பிடிப்பு தளத்திற்கு இளையராஜா வந்தால் அங்கிருக்கும் ஊழியர்கள் மற்றும் சக நடிகர் நடிகைகள் அவர் முன்னால் எழுந்துதான் நிற்பார்கள். தமிழ் சினிமாவில் இளையராஜாவிற்கு அப்படி ஒரு மரியாதை இருந்தது.

ilayaraja - updatenews360

இப்படி இருக்க, ஒரு நாள் படப்பிடிப்பிற்கு இளையராஜா வந்துள்ளார். அனைவரும் அவருக்கு மரியாதை செய்தபடி நிற்க, அரவிந்த் சாமி அமர்ந்தப்படி சிகரெட் பிடித்துள்ளார். அருகிலிருந்த நபர் அரவிந்த்சாமியிடம் இளையராஜா வருகிறார். சிகரெட் பிடிக்காதீர்கள் என கூறியுள்ளார்.

ilayaraja 1

அதற்கு அரவிந்த்சாமி இளையராஜாவிற்கு அவரது ஸ்டுடியோவில் என்ன மரியாதை தர வேண்டுமோ அதை கொடுப்பேன். ஆனால் இது படப்பிடிப்பு தளம் இங்கு என் இஷ்டத்துக்குதான் இருப்பேன் என கூறியுள்ளார். அதை கேட்ட இளையராஜா அரவிந்த்சாமி சொல்வது சரிதானே. அவரை அவர் இஷ்டத்துக்கு விடுங்கள் என சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதனை பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 798

    11

    3