இக்கட்டான சூழலில் சிக்கிய சாயிஷா..? நடிப்பதில் கடிவாளம் போடுகிறாரா ஆர்யா..?
Author: Rajesh24 February 2022, 2:56 pm
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இணைந்தவர்கள் தான் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சாயிஷா கர்ப்பமான பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அவருக்கு இந்த ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. எனவே குழந்தை பிறந்ததற்கு பிறகு சாயிஷா படத்தில் நடிப்பதற்கான சுதந்திரம் பரிபோனது என்றும், படத்தில் நடிக்க முடியாத நிலை உள்ளதாகவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம்.
குழந்தை இருப்பதால், நடிகர் ஆர்யா சில கட்டுப்பாடுகள் விதிப்பதால் இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டுள்ளாராம் சாயிஷா. படத்தில் நடிப்பதா! குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதா! என இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய சூழலில் சிக்கித்தவித்து வருகிறாராம்.
சினிமா நடிகைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் சாயிஷா சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புது மாற்றத்துடன் சினிமாவில் நுழைந்து தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்துவதற்கு விதவிதமான போட்டோ ஷூட்களை சாயிஷா நடத்திக் கொண்டிருக்கிறாராம்.