ஆர்யா மகளா இது? அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டாங்களா? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்துப்போன ரசிகர்கள்!
Author: Shree26 October 2023, 2:30 pm
கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட் நடிகையான சயீஷா ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.
சில வருடங்களாக தோல்வி படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரமபரை திரைப்படம் கைகொடுத்து தூக்கியது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமளிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஆர்யா சயீஷாவை திருமணம் செய்யும் எண்ணமே இல்லையாம். அவர் சயீஷாவுக்கு முன்னர் பல பெண்களை காதலித்தார். ஆனால் சயீஷாவுடன் நடித்தபோது அவரது பேக்ரவுண்ட் பார்த்து காதலிப்பது போன்று நடித்துள்ளார். ஆனால் சயீஷாவுக்கு ஆர்யா மீது உண்மையிலே காதல் வந்துவிட்டதாம்.
இது தான் சரியான நேரம் என சுதாரித்துக்கொண்ட ஆர்யா சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டார். சயீஷாவின் அம்மா அப்பா இருவருமே பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் அவர்களிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது. எனவே சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டாள் சகல வசதிகளுடன் ஜாலியாக வாழலாம் என நினைத்து தான் திருமணம் செய்தாராம்.
ஆர்யா – தம்பதிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. மகளின் கியூட்டான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட அதை பார்த்த இணையவாசிகள். அட நம்ம ஆர்யா மகளா இது? அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டாங்களா? என வாய்பிளந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.