ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஆர்யாவின் முன்னாள் காதலி.. காதலை மறக்க முடியாமல் தவிப்பு..!

Author: Vignesh
21 November 2022, 5:00 pm

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு வந்தார். பின் கஜினிகாந்த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீரோவாக நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி.

abarnathi - updatenews360

ஆர்யா மீது தீவிர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து ஜெயில் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணதி இன்னும் ஆர்யாவை மறக்க முடியாமல் இன்ஸ்டா ஐடியில் அவரது பெயரை abarnathi_6ya என்று வைத்துள்ளார்.

தற்போது ஆளே மாறி கண்ணாடியுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா என்று பலர் ஷாக்காகி வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 4811

    27

    6