அந்த ஒரு செயலுக்காக ஆர்யாவுடன் அதை செய்ய விருப்பமே இல்லை : உண்மையை உடைத்த முன்னாள் காதலி..!

Author: Vignesh
28 December 2022, 3:30 pm

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு வந்தார். பின் கஜினிகாந்த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீரோவாக நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி.

abarnathi - updatenews360

ஆர்யா மீது தீவிர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து ஜெயில் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணதி இன்னும் ஆர்யாவை மறக்க முடியாமல் இன்ஸ்டா ஐடியில் அவரது பெயரை abarnathi_6ya என்று வைத்துள்ளார்.

arya-Sayyeshaa-updatenews360-1

இன்று வரை ஆர்யா மீதுள்ள காதலால் அந்த பெயரை மாற்றாமலே இருந்து வருகிறார் அபர்ணதி. இதனைதொடர்ந்து ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது அபர்ணதிக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

சமீபத்தில் ஜெயில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அபர்ணதி சமீபத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதினை பெற்ற நிலையில், துணிவு-ஆ, வாரிசு-ஆ? இரு படத்தில் யார் படம் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு துணிவு தான் பார்ப்பேன் என்று வெளியாடையாக பேசியுள்ளார்.

abarnathi updatenews360

பின் ஆர்யாவுடன் இணைந்து ஜோடியாக நடிப்பீர்களா என்ற கேள்வி ”ஆர்யாவுடன் நடிக்கனும்னு விருப்பமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 1025

    2

    2