அவருடன் மறக்க முடியாத இரவு.. சாக்லேட் பாயுடன் ஆர்யாவின் முன்னாள் காதலி..!
Author: Vignesh12 October 2023, 2:08 pm
கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியில், பல போட்டிகளைக் கடந்து இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதாலட்சுமி ஹரிஹரன்.
மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும், சங்கடமாக இருக்கும் என ஆர்யா அதிலிருந்து பின்வாங்கி விட்டார். இதனால் மூவரும் மன கஷ்டத்தில் இருந்து வந்தனர். அதன்பின் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த சீதாலட்சுமி ஹரிஹரன் கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் உலாவிட்டு வந்தார். தற்போது சாக்லேட் பாய் நடிகர் மாதவன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.