நயன்தாராவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிளேபாய் நடிகர்.. அடம்பிடித்து காரியத்தை சாதித்த சம்பவம்..!
Author: Vignesh10 August 2023, 5:00 pm
ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், நான் கடவுள், சார்பட்டா, பரம்பரை உள்ளிட்ட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் ஆர்யா.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படத்தில் வரக்கூடிய பல காமெடி காட்சிகள் இன்று வரை மக்கள் ரசிக்கும்படி ஆர்யா, சந்தானம், காம்பினேஷனில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த படத்தினை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஹீரோயினாக நயன்தாராவை தான் போட வேண்டும் என்று ஆர்யா பல விஷயங்களை செய்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
படத்தின் கதையை கேட்டதும் ஆர்யாவுக்கு மிகவும் பிடித்து போக ஹீரோயினாக யாரை போடலாம் என்ற ஆலோசனையின் போது நயன்தாராவை தான் போட வேண்டும் என்று ஆர்யா அடம் பிடித்தாராம். அந்த சமயத்தில், நயன்தாரா வாழ்க்கை வெறுத்துப் போய் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்ற முடிவில் இருந்தாராம்.
படங்களின் நடிக்காமல் இருக்கும் நயன்தாராவிடம் எப்படி இது குறித்து பேசுவது என்று யோசனையில், இருந்த சமயத்தில் ஆர்யா நான் நயனுக்கு கால் செய்து பேசுகிறேன் என்று நயன்தாராவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று பல விஷயங்களை செய்தாராம்.
அந்த படத்திற்கு பின் தான் நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்தும் அதன் பின் 2013இல் ஆர்யாவுடன் ராஜா ராணி படத்திலும் இணைந்திருக்கிறார்கள் என்று ராஜேஷ் தெரிவித்திருந்தார்.