படுஒல்லியாக கைக்குழந்தையுடன் இப்படியொரு போட்டோஷூட்..! பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட புகைப்படம்..!

Author: Vignesh
7 January 2023, 8:00 pm

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்வார்.

நடிகை சாயிஷா தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தில் 18 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர். அதன்பின்னர் தமிழில் ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின்பு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகினார்.

Arya and Sayyeshaa02- updatenews360

கடந்த ஆண்டு அரியானா என்ற மகளை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றப்பின் தன் கணவர் ஆர்யாவுடன் டெட்டி படத்தில் நடித்தது கூறிப்பிடத்தக்கது. தற்போது படுஒல்லியாக மாறி தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை நடிகை சாயிஷா ‘பதிவிட்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?