எங்ககிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு? திருமணம் ஆன இரண்டே நாளில் அசோக் செல்வன் வேதனை!
Author: Shree15 September 2023, 6:05 pm
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை நேற்று முன்தினம் திருமணம் செய்துக்கொண்டார். அசோக் செல்வன் திருமணம் செய்துக்கொண்டதை அவரது தீவிர பெண் ரசிகைகளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சில இளம் பெண்கள் அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனை மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள். எங்ககிட்ட இல்லாதது அவகிட்ட அப்படி என்ன இருக்கு? அவளுக்கு நிக்க கூட நாதி இல்லை. அந்த உடம்புல ஒன்னுமே இல்லை. அத வச்சி என்ன பண்றது என மிகவும் மோசமாக பாடி shaming செய்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதற்கு சில ஆண்கள் அவங்க கிட்ட ரூ. 250 கோடி சொத்து இருக்கு உங்கிட்ட இருக்கா? ஏன் கேவலமா பொறாமை பிடித்து அலையுறீங்க என திட்டி தீர்த்துள்ளனர். இதனால் அசோக் செல்வன் மிகுந்த மன வருத்தத்தில் மனைவியை எப்படி சமாதானம் செய்வது என குழப்பத்தில் இருக்கிறராம்.