நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் தம்பதி தங்களது தல தீபாவளியை ரொமான்டிக்காக கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
This website uses cookies.