அசோக் செல்வனை காட்டிலும் பல மடங்கு பணக்காரி… கீர்த்தி பாண்டியன் சொத்து எத்தனை கோடி தெரியுமா ?

Author: Shree
23 September 2023, 5:41 pm

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ashok selvan

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

ஆம், பச்சை வயல்கள் சூழ, பூவாசம் மதி மயக்க, மலர் அலங்காரம் மனதை மயக்க மிகவும் அழகாக தமிழ் கலாச்சாரப்படி இத்திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வனின் சொத்து விவரம் குறித்த செய்தி வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஆம், கீர்த்தி பாண்டியனை விட அசோக் செல்வன் பல மடங்கு சொத்திற்கு சொந்தக்காரராம்.

ஒரு படத்திற்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கும் அசோக் செல்வனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 10 முதல் 15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு ரூ. 120 முதல் ரூ. 140 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் தான் கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் வளைத்துபோட்டாரோ என சந்தேகிக்கிறது ஊர் உலகம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 482

    0

    0