10 வருஷ காதல் பார்க்கும்போதெல்லாம் Proposal… கீர்த்தியை விடாமல் துரத்திய அசோக் செல்வன்!

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் புதுமண தம்பதிகள் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் தங்கள் காதல் பயணம் முதல் திருமணம் வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். மற்ற காதலர்களை போன்று good morning… good night இதெல்லாம் சொல்லிக்கொள்ளவே மாட்டார்களாம். ரொம்ப mature நடந்துப்போம் என கூறினார்கள். சூது கவ்வும் படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போவே love at first sight ஏற்பட்டதாக அசோக் செல்வன் கூறினார். நண்பர்கள் பார்ட்டி ஒன்றில் கீர்த்தி அழகாக சேலை உடுத்தி இருந்ததை பார்த்து மயங்கிவிட்டாராம் அசோக். பின்னர் சில நாட்கள் படங்கள் சார்ந்து அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டதாம்.

இதனிடையே இருவருக்குள் சண்டை வந்து 3 ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் பிரிந்துவிட்டார்களாம். பின்னர் மீண்டும் ஒரு சந்திப்பில் காதல் மலர அது திருமணம் வரை கொண்டு சேர்த்துள்ளது. இதனிடையே அவ்வப்போது கீர்த்தி சுரேஷ் மீதுள்ள காதலால், propose , வெளிநாடுகளுக்கு அவுட்டிங், சர்ப்ரைஸ் கிப்ட் என அசோக் செல்வன் கீர்த்தியை உருக உருக காதலித்து கட்டினாள் இதுவரை தான் கட்டுவேன் என கீர்த்தி மனதில் ஆழமான காதலை உருவாக்கிவிட்டராம். இந்த அழகிய ஜோடியின் இந்த காதல் பயணம் குறித்த நேர்காணல் வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதோ அந்த வீடியோ:

Ramya Shree

Recent Posts

பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…

எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…

35 minutes ago

கிரிக்கெட் விளையாடும் போது நொடியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் : ஷாக் வீடியோ!

தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…

38 minutes ago

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

2 hours ago

மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம்…

2 hours ago

ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…

3 hours ago

This website uses cookies.