“போடி வெண்ணை”…. தன்னை விமர்சித்த பெண்ணை மோசமாக திட்டிய அசோக் செல்வன் – வைரல் ட்வீட்!

Author: Shree
26 August 2023, 9:02 am

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

ashok selvan wedding

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்த போது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி அசோக் செல்வன் -கீர்த்தி பாண்டியன் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேசிய விருதுகள் வென்றவர்களுக்கு அசோக் செல்வன் தனது ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு ” போடி வெண்ண” என்ற ஐடியில் இருந்து, ” நல்லா இருக்குற நல்லா நடிக்குற அதோட நிப்பாட்டு” என கூற அதற்கு பதிலடி கொடுத்த அசோக் செல்வன் ” போடி வெண்ணை” என அந்த ஐடி பெயரையே சொல்லி திட்டுவிட்டுள்ளார். இந்த ட்விட் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!