நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.
அதையடுத்து சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்கள் அடுத்து படு தோல்வி அடைந்ததால் மார்க்கெட் இழந்து துவண்டு போயிருந்தார். அதன் பிறகு தான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் ஜெனரல் அண்மையில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் குவித்து வருகிறது.
இந்த படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்ப்போது பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சிறந்த படம் உங்களிடமிருந்து… இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன். அருமையான திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றி. என பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தார்.
அவரது இந்த பதிவிற்கு நன்றி கூறிய நடிகர் சரத்குமார், #போர் தொழில் படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் நடிகர்கள் வரை பட குழுவினர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி கொடுத்த விமர்சனத்திற்கு நன்றி, உங்கள் விமர்சனம் திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு சிறந்த படைப்பை அனுபவிக்க ஒரு ஊக்கமாக உள்ளது நன்றி என பதில் அளித்தார். மேலும் நடிகர் அசோக் செல்வன் ப்ளூ சட்டை மாறனின் பாசிட்டிவ் விமர்சனத்திற்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.