ரம்யா பாண்டியனின் தங்கையை கரம் பிடிக்கப்போகும் அசோக் செல்வன் – திருமண தேதியுடன் அறிவிப்பு!
Author: Shree12 August 2023, 7:29 pm
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது. இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் தற்போது அசோக் செல்வன் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த பெண்ணும் ஒரு நடிகை தான். ஆம் பிரபல வில்லன் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை தான் அசோக் செல்வன் திருமணம் செய்யவுள்ளார்.
இந்த திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் 13-ம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். கீர்த்தி பாண்டியனின் அக்கா தான் ரம்யா பாண்டியன் என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே அசோக் செல்வன் “k” என்ற எழுத்தில் துவங்கும் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார் என நம் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.