பீப் பீப்…. பிரபல நடிகையின் பிட்டு படத்தை பார்க்க ஆசைப்பட்ட அசோக் செல்வன் – ட்விஸ்ட் என்ன தெரியுமா?

Author: Shree
15 November 2023, 8:45 pm

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் அசோக் செல்வனிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதையேனும் திருடி வசமாக மாட்டிக்கொண்டதுண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம், ஒருமுறை நானும் என் நண்பனும் சிடி கடைக்கு சென்று அங்கிருந்த பல படங்களின் சிடிக்கள் வாங்கினோம்.

அப்போது நடிகை மாளவிகாவின் cu at9 என்ற ஆபாச படத்தின் சிடியை பார்த்து வாங்கலாம் என முயற்சித்தபோது எனக்கு அந்த சமயம் 14 வயது தான் அதனால் அதை வாங்கமுடியாது என்பதால் நானும் நண்பனும் அதை பில் போடாமலே திருடிக்கொண்டு கடையைவிட்டு வெளியேறும் போது அது பில்லிங் டேக் உடன் இருந்ததால் பீப் சவுண்ட் கொடுக்க நாங்க வசமா மாட்டிக்கொண்டோம். பின்னர் கடைக்காரர் எங்களை பிடித்துவைத்துக்கொண்டு பெற்றோரை வரவைத்து தான் எங்களை அனுப்பினார் என அசோக் செல்வன் கூறினார்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 294

    0

    0