தெருநாயை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து?- பிக்பாஸ் அமீரை கேவலப்படுத்திய வளர்ப்பு தந்தை!
Author: Prasad23 April 2025, 12:42 pm
பிக்பாஸ் ஜோடி
பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை சந்தித்தார். வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், சில நாட்களிலேயே பாவனியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் பாவனி அந்த சமயத்தில் அமீரின் காதலை ஏற்கவில்லை.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் லிவ் இன் உறவில் இருந்துவந்த இருவரும் கடந்த 20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் அமீரின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
அமீரை வளர்த்த குடும்பத்தினர்
சிறு வயதிலேயே ஆதரவற்று இருந்த அமீரை தன்னுடைய சொந்த பிள்ளையாக நினைத்து வளர்த்தவர் அஷ்ரஃப். இவர் “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஷுவின் தந்தை ஆவார். அஷ்ரஃபின் குடும்பத்தினருக்கும் அமீருக்கும் இடையே சில ஆண்டுகளாக மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 20 ஆம் தேதி அமீருக்கும் பாவனிக்கும் இடையே திருமணம் நடைபெற்ற நிலையில் அஷ்ரஃப் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவேற்றியிருந்தார். அதில், “ஒரு தெரு நாய் ரோட்டில் பசியோடு இருந்தால் அதனை வீட்டிற்கு எடுத்து வந்து உணவு கொடுத்து வீட்டோடையே வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு மனிதன் அந்த நிலையில் இருந்தால் அவனுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து காசு கொடுத்து அனுப்பிவிடலாமே தவிர வீட்டிற்கு அழைத்து வந்துவிடக்கூடாது.
அது மிகப்பெரிய தவறு. அதற்கு வாழும் உதாரணமாக நான் இருக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த ஸ்டோரியை நீக்கிவிட்டார் அவர். அமீரை தொடர்புபடுத்தித்தான் இந்த பதிவை அஷ்ரஃப் பகிர்ந்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
