தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!

Author: Selvan
15 March 2025, 9:56 pm

தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிலம்பரசனுடன் (STR 51) படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படியுங்க: ‘பவுன்டரி டூ பாக்ஸ் ஆபிஸ்’..மிரட்டும் வார்னர்..ராபின்ஹுட் படத்தின் ரிலீஸ் தேதி லாக்.!

2025 பிப்ரவரி 21-ம் தேதி வெளியான “டிராகன்” திரைப்படம்,இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் மூன்றாவது படமாகும்.இதில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்,ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து,அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் STR 51 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில்,இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து,நடிகர் தனுஷுடன் ஒரு புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும்,அவருக்காக ஆக்ஷன்,காதல் மற்றும் த்ரில்லர் கலந்த கதையை எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தனுஷ் அந்த கதையை விரும்பி ஒப்புக்கொண்டதாகவும்,விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதனால்,அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி வருகிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!
  • Leave a Reply