வதந்திகளை தயவு செய்து பரப்பாதீங்க…அஸ்வத் மாரிமுத்து கோரிக்கை.!

Author: Selvan
22 March 2025, 12:56 pm

அஷ்வத் மாரிமுத்து மறுப்பு

சமீபத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.இந்த ஆண்டு தொடக்கத்தில் எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை டிராகன் படைத்தது,வசூலில் 150 கோடியை தாண்டி மிரட்டியது.

இதையும் படியுங்க: மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?

‘டிராகன்’ வெளியாவதற்கு முன்பே,சிலம்பரசன் நடிக்கும் ‘STR 51’ படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.இதற்குப் பிறகு,ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம்,மேலும் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்த நிலையில் இந்த வதந்திகள் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.”என்னுடைய அடுத்த படங்கள் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.அப்படி ஏதேனும் இருந்தால் நானே முதல் ஆளாக தெரிவிப்பேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைக்கு நடிகர் சிம்புவை வைத்து STR 51 படத்தை இயக்க மட்டுமே திட்டமிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!
  • Leave a Reply