நீ யார்கிட்டயும் போகலன்னு சொல்றா… பயில்வான் லீலைகளை அவிழ்த்துவிட்ட துணை இயக்குனர்!

Author: Shree
2 August 2023, 5:19 pm

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.

இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார். உதாரணத்திற்கு பீச் ரோட்டில் வாக்கிங் செல்லும்போது நடிகை ரேகா நாயரிடம் அடி வாங்கியது, மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன் பயில்வானனை மேடையில் அசிங்கப்படுத்தியது உள்ளிட்ட சம்பவங்கள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் துணை இயக்குனர் ஹரிஹரன் பயில்வான் குறித்த கேள்விக்கு மிகவும் கோபப்பட்டு ஆதங்கத்துடன் பதில் அளித்துள்ளார். அதாவது, பயில்வான் சரியான பிராடு… ஒவ்வொரு யூடுப் சேனல்களிலும் அந்த நடிகை அப்படி இந்த நடிகை இப்படின்னு கீழ்தரமா பேசுறான் நீ யாருகிட்டயும் போகலன்னு சொல்லு நான் உனக்கு சல்யூட் அடிக்கிறேன். இவனே அயோக்கிய பையன்… இவனே மாமா வேலை பார்த்தவன். உனக்கு மத்தவங்கள பத்தி பேச என்ன ரைஸ்ட் இருக்கு? என விளாசித்தள்ளியுள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் தாத்தா பேமஸ் ஆக பயில்வான் பத்தி கன்டென்ட் கொடுத்து பேசுறாரு என ட்ரோல் செய்துள்ளனர்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?