என்னுடைய முதல் காதலி சமந்தா…வெளிப்படையாக சொன்ன இளம் நடிகர்..!

Author: Selvan
23 November 2024, 3:33 pm

அதர்வாவின் முதல் பட அனுபவம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு பெண் ரசிகர்களின் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அதர்வா.

இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான நிறங்கள் மூன்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Atharvaa unforgettable moments with Samantha

இப்படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது தன்னுடைய முதல் திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி பேசினார்.அதில் “நான் சினிமாவில் எத்தனை வருடங்கள் நடித்தாலும் என்னுடைய முதல் காதல் ஜோடியை மறக்க முடியாது என கூறியிருப்பார்.

என்னுடைய முதல் திரைப்படமான பானா காத்தாடி படத்தில் சமந்தா எனக்கு ஜோடியாக நடித்திருப்பார்.அப்படத்தின் முதல் காட்சியே மரத்திற்கு கீழே இருவரையும் நிற்க வைத்து காதல் செய்ய சொன்னார்கள்.அப்போது எனக்கு ஒரு வித பயத்தில் என்ன பேசுவதுனு தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.ஆனால் சமந்தா ரொம்ப எதார்த்தமாக என்னிடம் பேச தொடங்கினார்.

இதையும் படியுங்க: கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்…படக்குழு திணறல்..!இதெல்லாம் ஒரு காரணமா?

அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்றும்,சமந்தா இன்னும் எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் எனக்கு சந்தோசம் தான் என்று அந்த நிகழ்ச்சியில் அதர்வா தெரிவித்திருப்பார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 141

    0

    0