“மிஸ் யூ அப்பா”….கொடுமையான நேரம் அது…மனம் உடைந்து பேசிய அதர்வா..!

Author: Selvan
10 December 2024, 1:44 pm

அப்பாவின் நினைவுகள்-அதர்வாவின் பகிர்வு

தமிழ் சினிமாவில் 80,90-களில் தன்னுடைய காதல் படங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் நடிகர் முரளி.இவர் நடித்த இதயம்,புதுவசந்தம்,பொற்காலம்,சுந்தரா ட்ராவல்ஸ் போன்ற படங்கள் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Murali heart attack

சினிமாவின் உச்சத்தில் இருந்த போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.முரளியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் யாரும் தங்களுடைய குடும்ப நிகழ்வுகளை பெரிதாக ஊடகத்திற்கு சொல்லவில்லை.

இதையும் படியுங்க: ரசிகர்கள் செய்த வேண்டாத வேலை.. போன் போட்டு எச்சரித்த ரஜினிகாந்த்!!

இந்நிலையில் முரளி மகன் அதர்வா சமீபத்தில் தந்தையின் மரணம் குறித்து YOUTUBE சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அப்பா இறந்த அன்றைக்கு அக்காவோட நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீட்டில் நடந்தது.நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் தூங்க போவதற்கே ரொம்ப நேரம் ஆகிவிட்டது.உறவினர்கள் அனைவருடன் சகஜமா பேசிவிட்டு,அப்பாவும் அவருடைய அறைக்கு சென்று தூங்கினார்.

Atharvaa's heartfelt moments

கொஞ்ச நேரத்தில் என்னுடைய கதவை தட்டி எழுப்பினார்கள்.ஒரு 20 நிமிடம் எனக்கு என்ன நடக்குதுன்னு புரியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்,என் தந்தையை காரில் அழைத்து சென்ற அந்த நிமிடங்கள் என் வாழ்வில் மிகக்கொடிய நேரம் என்று மன வருத்தத்துடன் கூறி இருப்பார்.

என் தந்தையை பற்றி யாராவது பேசினால் எனக்கு அந்த நாள் தான் நியாபகத்துக்கு வரும்,இதனால் பெரும்பாலும் அதை தவிர்த்துவிடுவேன் என அந்த பேட்டியில் அதர்வா தெரிவித்திருப்பார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!