அட பப்ளிசிட்டி பைத்தியமே.. அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஓவர் அலப்பறை பண்ணும் அட்லீ மனைவி..!(Video)
Author: Vignesh13 ஜூலை 2024, 3:30 மணி
தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி இருந்தார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
இந்நிலையில், அட்லீயின் இப்படத்தையும் நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ட்ரோல் செய்து வந்தனர். அதன்படி, ஜவான் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு படங்களில் இடப்பெற்ற காட்சிகளை பிட்டு பிட்டாக சுட்டு தான் படம் எடுத்து வைத்து இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸின் படத்தில் இருந்தே நிறைய காட்சிகள் சுடப்பட்டிருப்பதாக நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்து இருந்தனர்.
இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், அட்லீ இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார் என்பது உண்மை. அதாவது, அட்லீ இயக்கிய ஜவான் படம் உலகம் முழுவதும் ரூபாய் 1100 கோடிகள் வசூல் செய்து, அட்லீயை பிரம்மாண்ட உயரத்தில் அமர வைத்துள்ளது.
மேலும் படிக்க: தடபுடலாக நடந்த ரோபோ ஷங்கர் மகளின் திருமணம்.. கொடுக்கப்பட்ட வரதட்சணை எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கம் உள்ளதாகவும், இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், அட்லீ தற்போதுயெல்லாம் தமிழ்நாடு பக்கம் வருவதே இல்லையாம். மும்பையிலேயே ஒரு பிரம்மாண்ட ஆபீஸ் போட்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அட்லீ என்னதான் பெரிய பெரிய ஹிட் கொடுத்தாலும், அவருடைய படங்களின் காட்சிகள் பல படங்களில் இருந்து சுடப்பட்டவை என்பதை தவிர்க்க முடியாது.
அதிலும், ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இவர் அடித்த காப்பியெல்லாம் ரசிகர்களே மறந்து விட்டனர். அந்த அளவுக்கு இருந்தது, இது ஒரு புறம் இருக்க இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக அட்லீ வளர்ந்து விட்டார். அதாவது, சுமார் 30 கோடிகள் வரை அவரது சம்பளம் உயர்ந்து உள்ளது. இவரின் சொத்து மதிப்பு 60 கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு மேல் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
தற்போது, அட்லீ தன்னுடைய அடுத்த பட கதை தயார் செய்துவிட்டு படத்தை இயக்க தயாராக உள்ளார். அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து இயக்க உள்ளாராம். விரைவில், இந்த படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுவதாகவும், அட்லீ இந்த திரையுலகில் இதுவரை யாரும் பெறாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை தயாரித்து வரும் நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில், அட்லீ மற்றும் பிரியா அட்லீ வித்தியாசமான கலர் உடையில் வந்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு இப்படியா டிரஸ் போடுவது? என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரராக திகழும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் வருகிற ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்க அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் ஜோடியாக சென்று இருக்கின்றனர்.
அப்போது, ‘Anant’s brigade’ என எழுதி இருக்கும் உடையில் தான் பிரியா வந்திருக்கிறார். அதாவது, ஆனந்தின் படை என்ற அர்த்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அதாவது, அவர்கள் ஆனந்த் அம்பானியின் தரப்பு விருந்தினர்கள் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டோகிரபர்கள் கேட்டதால் பிரியாவின் முதுகை அட்லீ காட்ட சொல்லி இருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அட பப்ளிசிட்டி பைத்தியங்களே என்று கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.
0
0