நெருங்கி வருவாய்…நெருங்கி வருவாய்- Close up Ad போல் ரொமான்ஸ் செய்யும் அட்லீ – வீடியோ!

Author: Rajesh
25 January 2024, 7:18 pm

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.

அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

atlee priya - updatenews360

இந்நிலையில் அட்லீ மனைவி பிரியாவுக்கு ரொமான்டிக் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர்… என்ன சார்… ரொமான்ஸ் பண்ணச்சொன்னா நெருங்கி வருவாய்…நெருங்கி வருவாய்னு Close up Adகு ஷூட் எடுக்குற மாதிரி பண்ணியிருக்கீங்க என ட்ரோல் செய்துள்ளனர்.

  • Ilaiyaraaja is not reason for good bad ugly hit said by premji பெரியப்பா பாட்டுலலாம் ஒன்னும் இல்ல? எல்லாமே பொய்- இளையராஜாவை வம்புக்கு இழுக்கும் பிரேம்ஜி?