சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!

Author: Selvan
28 December 2024, 1:55 pm

பேபி ஜான்:பிரம்மாண்ட தயாரிப்பு, மந்தமான வரவேற்பு

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் அட்லீ,தற்போது பாலிவுட் பக்கம் சென்று தனது வித்தைகளை காட்டி வருகிறார்.அதிலும் குறிப்பாக இவர் பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் தயரிப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார்.

Atlee debut produced by Baby John

தமிழில் ராஜா ராணி மூலம் இயக்குனராக அறிமுக ஆகி பின்பு விஜயை வைத்து மெர்சல்,தெறி,பிகில் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.அதன் பின்பு சமீபத்தில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் தமிழ் சினிமா மட்டுமின்றி,பாலிவுட்டிலும் அடுத்தடுத்து படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.தற்போது இவருடைய தயாரிப்பில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெறி ரீமேக் ஆக வெளிவந்த பேபி ஜான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.படத்திற்காக பல ஊர்களில் பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் வேலைகளை பண்ணினாலும்,இது ரீமேக் படம் என்பதால் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை.

இதையும் படியுங்க: நடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!

சுமார் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாள் மட்டும் 12 கோடி வசூலை பெற்றது.அதன் பின்பு வசூல் மந்தமாகி,ஒற்றை படையில் வசூல் பெற்று வருகிறது.

இதனால் படத்தின் செலவிற்கான வசூலையாவுது பெற முடியுமா என படக்குழு சோகத்தில் உள்ளனர்.இதன் மூலம் அட்லீ தயாரித்த முதல் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மறுபுறம் அல்லுஅர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 1800 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!