அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!

Author: Selvan
19 December 2024, 8:18 pm

உதவி இயக்குனர்களுக்கு அட்லீ கொடுத்த பரிசு..!

தமிழ் சினிமாவில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து,பின்பு ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் அட்லீ.ராஜா ராணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,அடுத்தடுத்து படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.

Atlee buys flats for assistants

அதன் பின்பு நடிகர் விஜயை வைத்து தெறி மெர்சல்,பிகில் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.சமீபத்தில் பாலிவுட்டில் அடியெடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி,இந்திய அளவில் புகழின் உச்சிக்கு சென்றார்.

இவர் அடுத்தடுத்து பாலிவுட்டில் உள்ள பிரபல ஹீரோக்களை வைத்து படம் இயக்கியும் தயாரித்தும் வருகிறார்.இந்த சூழலில் ரசிகர்கள் பலருக்கும் தெரியாத அட்லீயின் இன்னொரு முகத்தை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: “சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!

அதாவது,அட்லீ தன்னுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலருக்கு சொந்தமாக பிளாட் வாங்கி கொடுத்துள்ளார்.தன்னுடைய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாக இருந்த உதவி இயக்குனர்களுக்கு அவர் செய்த இந்த நெகிழ்ச்சியான செயலை, தற்போது பலர் பாராட்டி வருகின்றனர்.

இதற்கு முன்பு நடிகர் அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் நபர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 19

    0

    0

    Leave a Reply