பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலை என்னவென்றால் அட்லீ மனைவி பிரியாவின் பிறந்தநாளுக்கு பார்த்து பார்த்து சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதாவது மனைவி பிறந்தநாளுக்கு எப்போதும் இல்லாத வகையில் பக்தி பரவசத்தில் மகா காலேஷ்வர் கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு கடவுளை தரிசனம் செய்துள்ளார். இவர்களுடன் ஜான்வி கபூர் மற்றும் அவரின் காதலர் சென்று ஸ்வாமியை வழிபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும், மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து பதிவிட்டுள்ள அட்லீ, இது உங்கள் பிறந்த நாள், என் அன்பே! நான் ஒரு பெண் வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன், ஆனால் என்ன தெரியுமா? கடவுள் மிகவும் தாராளமானவர், அதற்கு பதிலாக அவர் எனக்கு ஒரு தேவதையைக் கொடுத்தார். அந்த ஏஞ்சல் என் ஆசைகள் அனைத்தையும் நனவாக்க, நீ தான் என் எல்லாம். இப்போது, எங்கள் குடும்பத்திற்கு ஒரு அழகான சிறிய சேர்க்கை உள்ளது, மீர்(மகன்). எங்கள் சொந்த நிஜ வாழ்க்கை கார்ட்டூன் சுஜி மம்மிக்கு உண்மையிலேயே அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க தந்தை மற்றும் மகன் இருவரும் இங்கு வந்துள்ளனர். உங்கள் வழியில் நிறைய அன்பை அனுப்புகிறேன் என கூறி பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.